←கணவன்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிமனைவி

கற்பு→

 

 

 

 

 


439222குடும்பப் பழமொழிகள் — மனைவிதியாகி ப. ராமசாமி

 

 


மனைவி


இனிப்புக்குத் தேன், அன்புக்கு மனைவி.  -இந்தியா 
இல்லாள் இல்லாத வீட்டில் பேய்கள் குடியிருக்கும்.  -( , , ) 
விவாகமான பெண்கள் அனைவரும் மனைவியர் ஆகமாட்டார்  -ஜப்பான்  
தீய மனைவி அறுபது வருடமாய்த் தீய்ந்து போகும் பயிருக்குச் சமானம்.  -( , , )  
இளம் மனைவி தன் வீட்டில் நிழலாகவும், எதிரொலியாகவுமே இருக்க வேண்டும்.  -( , , )  
மனைவியின் மூன்று அங்குல நீளமுள்ள நாக்கு ஆறு அடி உயரமுள்ள மனிதனைக் கொல்ல முடியும்.  -( , , )  
மனைவியரும் பாய்களும் வந்த புதிதில் சிறப்பா யிருப்பவை.  -( , , )  
உன்னிடம் ஏழு பிள்ளைகள் பெற்றிருந்தாலும், அந்தப் பெண்ணை நம்ப வேண்டாம்.  -( , , )  
உன் தாயின் கண்கள் அவளைக் கவனிக்கும்வரை நீ ஒரு பெணணை  நம்பலாம்.  -( , , ) சேவலுக்கு வாழ்க்கைப் பட்டால், அதன் பின்னேதான் செல்ல வேண்டும்.  -சீனா  
ஒற்றைத் திறவுகோல் கிலுகிலுக்காது.  -( , , ) 
ஒரே மனைவியிருந்தால், வீட்டில் சண்டைஇராது.  -( , , )  அழகில்லாத மனைவியரும், அறிவில்லாத வேலைக்காரிகளும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள்.  -சீனா  
மனைவியால் அவதிப்படுவோன்-அந்தோ பரிதாபம்!

 -அரேபியா  
மனிதன், தன்மனைவியைத் தவிர, மற்ற எதைப்பற்றிப் பேசினாலும், பொறுத்துக் கொண்டிருப்பான்.  -பாரசீகம்  
ஊமையான மனைவி கணவனிடம் அடிபடுவதேயில்லை.

 -ஃபிரான்ஸ்  
தேனீயை மனைவியாக உடையவன் சந்தோஷமாக யிருப்பான்.  -ஜெர்மனி  
(சுறுசுறுப்புள்ள மனைவியால் ஆக்கம் பெருகும்.) ஃபிடிலைப் போல் பெண்ணை மீட்டிவிட்டு உயரே தூக்கி வைத்து விடமுடியாது.  -( , , )  குடியானவன் தன் மனைவியை அடிக்காவிட்டால்,
அவளுடைய ஈரல் அழுகிப் போகும்.  -போலந்து  
வயோதிகனுக்கு வாய்த்த இளம் மனைவி அவன் நரகத்திற்கு ஏறிச் செல்லும் குதிரை.  -( , , ) 
மனைவியர் இளைஞருக்கு நாயகிகள், முதியோருக்குத் தாதிகள்.  - இங்கிலாந்து  
உண்மையான வீட்டுக்காரி அடிமையாகவும் இருப்பாள்,

வீட்டு அதிகாரியாகவும் இருப்பாள்.  -போஸ்னியா  
ஒழுகும் கூரையும், புகையடையும் கூண்டும், ஓயாமல்

சண்டையிடும் மனைவியும் ஒருவனை வீட்டை விட்டுக் கிளப்பிவிட முடியும்.  - வேல்ஸ்  
ஒரு குற்றமுள்ள மனைவி வேண்டாமென்றால், இரு குற்றமுள்ளவள் வந்து சேருவாள்.  -( , , ) 
என் முதல் மனைவி மனைவியா யிருந்தாள்; இரண்டாமவள் என் யசமானியா யிருந்தாள்; மூன்றாமவளை நான் சிலுவை போல் வைத்துக் கும்பிடுகிறேன்.  -பல்கேரியா  
அடங்காப்பிடாரி ஒருத்தி இருந்தால் போதும் - சுற்றிலும் பத்து வீடுகளுக்குக் காவல் நாய் தேவையில்லை.

 -ஸெக்  தாடி ஒரு மனிதனுக்குக் கௌரவம்; மனைவி அவன் கருவி.  -எஸ்டோனியா  
குருட்டுக் கோழிக்கும் ஒரு தானியம் கிடைக்கின்றது, குடிகாரனுக்கும் ஒரு மனைவி கிடைக்கிறாள்.  -( ,, )  
குதிரையையும் மனைவியையும் இலகானில்லாமல் உபயோகிக்க வேண்டாம்.  -( ,, ) 
உலகத்திற்கெல்லாம் தெரிய வேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் சொன்னால் போதும்.  -( ,, )  
கன்னியா யிருக்கும் பொழுது மாடப்புறாவா யிருந்தவள் மனைவியான பின் தண்டாயுதமாகி விட்டாள்.  -( ,, )  
மனிதனுக்கு மனைவி வாய்த்தே தீருவாள்.  -( ,, )  
கப்பல், குதிரை, அல்லது மனைவியை மற்றவரை நம்பி ஒப்படைக்காதே.  -( ,, ) 
மனிதனின் பூட்டு மனைவி.  -( ,, ) 
மனைவி ஒருமுழம் தள்ளி யிருந்தாலும், அந்த அளவுக்கு மனிதன் சுதந்திரமுள்ளவன்.  -( ,, ) 
மனிதன் வாழ்க்கையை மனைவியே பாழாக்குகிறாள்.  -( ,, )  
எல்லாப் பெண்களும் நல்லவர்களா யிருக்கும் பொழுது, கெட்ட மனைவியர் எங்கிருந்து வருகின்றனர்?  -( ,, )  
அழகான பெண் கண்ணுக்குத்தான் சுவர்க்கம், ஆனால் பணப்பைக்குச் சனியன், ஆன்மாவுக்கு நரகம்.  -( ,, )  
ஏழை மனைவிக்கு எத்தனையோ இன்னல்கள் : அழுகின்ற குழந்தைகள், ஈர விறகு, ஓட்டைப் பானை, கோபமுள்ள கணவன்.  -ஃபின்லந்து  
என் கணவன் என்னை அடிப்பதில்லை, காரணம் அவனுக்கு என்மீது அன்பில்லை.  - கிரீஸ்  மனைவியர் நல்லவரா யிருந்தால், கடவுளும் ஒருத்தியை மணந்திருப்பார்.  -ஜியார்ஜியா  அழகான பெண்ணின் புன்னகை பணப்பையின் கண்ணீராகும்.  -லத்தீன்  மனைவியில்லாத கூடாரம் தந்தியில்லாத வீணை.  -ருமேனியா  
பெண்ணைவிட நாய் அறிவுள்ளது, அது தன் யசமானரைப் பார்த்துக் குரைப்பதில்லே.  -ரஷியா  
பெண்ணின் யாத்திரை சமையலறையிலிருந்து வாயிற்படிவரை   -( ,, )  
மனைவிக்குக் கணவனே சட்டம்.  -( ,, )  சில சமயங்களில் அறிவுள்ள மனைவியின் சொல்லையும் கேட்டு நடக்கலாம்.  -செர்பியா  மனைவி இன்றியமையாத ஒரு தீமை.  -( ,, ) 
உன் கணவனை ஒரு நண்பனைப் போல நேசி, ஆனால் பகைவனைப் போல எண்ணி அவனுக்கு அஞ்சி நட.

 -ஸ்பெயின்  
ஒரு மனிதனின் அதிருஷ்டமோ துரதிருஷ்டமோ அவன் மனைவிதான்.  -( ,, )  
பெண்டாட்டி யென்றால், புடவை, துணிமணிகள் என்று பொருள்.  -ஆப்பிரிகா  
உன் மனைவியிடம் ஆலோசனை கேள், ஆனால் அவள் சொல்வதற்கு மாறாகச் செய்.  -( ,, )  பெண்ணுக்குப் பணிவது நரகத்திற்குப் பாதை.  -( ,, ) 
உத்தமமான மனைவி கணவனுக்கு ஒரு கிரீடம்.  -ப. ஏற்பாடு  
புதிதாகக் கலியாணமானவனே தன் மனேவியிடம் செய்திகள் கூறுவான்.  - இங்கிலாந்து  இங்கே புதைத்திருக்கிறது என் மனைவியை; அவள் இங்கேயே யிருக்கட்டும் இப்போது அவளுக்கு ஓய்வு,
எனக்கும் ஒய்வு.  -டிரைடன்  
பலர், தாம் சிக்கனமில்லாமல் வாழ்ந்து விட்டு, மனைவியைக் குறை சொல்லுவர்.  -இங்கிலாந்து  
மிகவும் சாந்தமான கணவர்களுக்கும் புயல் போல் சீறும் மனேவியர் அமைகின்றனர்.  -( ,, ) 
அழகிய மனைவியை உடையவனுக்கு இரண்டு கண்களுக்கு மேல் தேவை.  -( ,, )  அறைகள் காலியா யிருந்தால், மனைவியர்க்குத் தலைகிறு கிறுக்கும்.  - இங்கிலாந்து  மனிதன் எல்லா விஷ ஜந்துக்களுக்கும் மருந்து கண்டுபிடித்திருக்கிறான், ஆனால் தீய மனைவிக்கு மட்டும் இன்னும் மருந்து காணவில்லை.
 -ராபலே  
கெட்ட மனைவியால் கணவனின் கப்பல் உடையும்.

 - ஜெர்மனி  
இறந்து போன மனைவியும், உயிருள்ள ஆடுகளும் ஒரு மனிதனைச் செல்வனாக்கும்.  -( ,, )  
கெட்ட மனைவியை உடையவன் செல்வங்களின் நடுவில் வறுமையில் வாடுபவன்.  -( ,, ) 
உன் மனைவி குள்ளமாயிருந்தால், நீ குனிய வேண்டும்.  -யூதர்  
மனைவி உறங்கும் பொழுது, (சாமான்) கூடையும் உறங்குகின்றது.  -( ,, ) 
ஒரு மகள் வேண்டுமென்று தேர்ந்தெடுப்பதுபோல், மனைவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  -இதாலி  
இறந்த மனைவியின் துக்கம் வாயிற் கதவோடு சரி. -  இதாலி  
ஸீஸரின் மனைவி சந்தேகத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது.  -லத்தீன்  
(ரோமாபுரியில் ஆண்டு வந்த தலைவர்கள் ஸீஸர்கள், ஸீஸரின் மனைவி, எவரும் சந்தேகம் கொள்ள இடமில்லாமல், அப்பழுக்கற்றவளாக இருக்கவேண்டும்.) 

பிறர் மனைவியரிடம் ஒருபோதும் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டாம்.  -( ,, ) 
மனைவி உள்ள கட்டிலில் சண்டையில்லாமல் இராது.  -( ,, ) 
விவாகமான மனிதன் ஒவ்வொருவனும் தன் மனைவி ஒருத்திதான் உலகிலே நல்லவள் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.  - ஸ்பெயின்  மனைவியைக் கௌரவிக்காதவன் தன்னையே குறைவு படுத்திக் கொள்கிறான்.  -ஸ்பெயின்  
ஊமை மனைவி வாயால் ஏசமாட்டாள், கைகளை நெரித்து ஏசுவாள்.  -யூதர்  
மனைவியைப் பற்றிக் குறை சொல்பவன் தன்னையே இழிவு செய்து கொள்கிறான்.  -ஸ்காட்லந்து  மனைவி விட்டுப் பிடித்தால்தான், ஒருவன் முன்னிலைக்கு வரமுடியும்.  -( ,, )  வெள்ளாட்டின் வெண்ணையும், பெண்டாட்டி சொத்தும் வீட்டுக்கு வேண்டாம்.  -ஃபின்லந்து 
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel