←நோய்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிவைத்தியம்

மருந்து→

 

 

 

 

 


439246குடும்பப் பழமொழிகள் — வைத்தியம்தியாகி ப. ராமசாமி

 

 


வைத்தியம்

 
காலம்தான் தலை சிறந்த வைத்தியர்.  -யூதர் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.
 - தமிழ் நாடு  வைத்தியரின் மரங்களுக்கு நம் கண்ணீர்தான் தண்ணீர்.  - இந்தியா  
வைத்தியருக்கு மூக்கிலே படர்தாமரை.  -( , ,) 
அரைகுறை வைத்தியனால் உயிருக்கு ஆபத்து, அரைகுறை முல்லாவால் சமயத்திற்கே ஆபத்து.  -( , ,) 
[முல்லா- முஸ்லிம்களின் குரு] 

நீதிபதி, வைத்தியர் இருவரிடமிருந்தும் இறைவன் என்னைக் காப்பானாக.  -துருக்கி  
உடலைக் குணப்படுத்தலாம், மனதைக் குணப்படுத்த முடியாது.  -சீனா  
வைத்தியர் தூரத்திலிருந்து கொண்டே மருந்து அனுப்புதல், குருட்டுக் கண்ணால் பார்ப்பது போலாகும்.

 -யூதர்  
இலவச வைத்தியம் - பயனற்ற மருந்தாயிருக்கும்.  -( , ,)  
நோயை சொன்னால்தான், குணமாக மருந்து கிடைக்கும்.  - ஃபிரான்ஸ்  
வைத்தியர் வந்தாலே, நோய் குணமாகத் தொடங்கிவிடும்.  -( , ,) 
வைத்தியர்கள் மட்டும் பொய் சொல்ல அனுமதியுண்டு.  -( , ,) 
மெத்தப் படித்த வைத்தியரை விட ஆக்கமுள்ள வைத்தியர் மேல்.  -ஜெர்மனி  
வைத்தியர் இளமையா யிருந்தால், எப்பொழுதும் மூன்று

சவக்குழிகள் தயாரா யிருக்கவேண்டும்.  -ஜெர்மனி  
வைத்தியனுக்கு மூன்று விஷயங்கள் தேவை - சிங்கத்தின் இதயம், பெண்ணின் கரம், கழுகின் பார்வை.  -( , ,)  நோயைக் கொன்றாலும், ஆளைக் கொன்றாலும், வைத்தியருக்கு 'ஃபீஸ்' உண்டு,  - போலந்து  
பிச்சைக்காரர்களுக்குள் அவ்வளவு துவேஷம் கிடையாது. வைத்தியர்களுக்குள்ளே அதிக வெறுப்பு உண்டு.  -( , ,)  தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்பவனுடைய நோயாளி மூடன்.  -இங்கிலாந்து  
பல வைத்தியர்கள் பார்த்தால், மரணம் நிச்சயம்தான்.

 -ஸெக்  
தண்டனை யடையாமல் கொல்லக்கூடியவர் வைத்தியர் ஒருவரே.  -ஹங்கேரி  
எல்லோரும் ஆரோக்கியமா யிருந்தால், வைத்தியர் பாடு

திண்டாட்டம்.  -( , ,)  
கடுமையான நோய்க்குக் கடவுளே வைத்தியர்.  -( , ,)  
ஒரு தொழிலும் தெரியாதவன் வைத்தியனாகிறான்.  - இதாலி  
வைத்தியர்கள் அதிகமானால், நோய்கள் பெருகும்.

 -போர்ச்சுகல்  
வைத்தியர்களும் நீதிபதிகளும் பயமில்லாமல் கொலை செய்கிறார்கள்.  - ரஷ்யா  
ஒவ்வொரு பிணிக்கும் வைத்தியரை நாடவேண்டாம்; ஒவ்வொரு வழக்குக்கும் வக்கீலை நாட வேண்டாம்.

 -ஸ்பெயின்  
மரணம்தான் கடைசி வைத்தியர்.  -( , ,)  
நீ வைத்தியரை வெறுத்தால், பிணியையும் வெறுக்க வேண்டும்.  - ஆப்பிரிகா  
அநுபவமில்லாதவன் வைத்தியரைக் குணப்படுத்திவிடுவான்.  -( , ,) 
நீயோ வைத்தியரை ஏமாற்றிவிட்டாய்; அடுத்த நோய்க்குச் சொந்த வைத்தியம் செய்துகொள்.  -( , ,)  
வைத்தியர்களில் வயதானவர், வக்கீல்களில் வாலிபர்.

 - இங்கிலாந்து  
குணப்படுத்துவது கடவுள், சம்மானம் பெறுவது வைத்தியர்.  -( , ,) 
தேவை வருமுன்பே வைத்தியருக்கு மரியாதை செய்ய வேண்டும்.  -( , ,)  வைத்தியரிடத்திலும் வக்கீலிடத்திலும் உண்மையை மறைக்காதே.  -இதாலி  
வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.

 - தமிழ் நாடு  
ஒன்றும் தெரியாத வைத்தியன் கொலைகாரனைத் தவிர வேறில்லை.  -சீனா  
வாலிப நாவிதன், வாலிப வைத்தியன் இருவரிடமும்

எச்சரிக்கையா யிருக்கவேண்டும்.  - இங்கிலாந்து  
வைத்தியர் குணமாக்கினால் சூரியனுக்குத் தெரியும், வைத்தியர் கொன்று விட்டால், பூமிக்குத் தெரியும்.

 -( , , )  
வைத்தியர்கள் கலந்து ஆலோசிப்பதற்குள், நோயாளி இறந்து விடுகிறான்.  -( , , )  
வைத்தியருக்குக் கொடுப்பதை ரொட்டிக்காரனுக்குக் கொடு.  -ஃபிரான்ஸ்  
வைத்தியருக்குக் கொடுப்பதை இறைச்சிக்காரனுக்குக் கொடு.  -ஃபிரான்ஸ்  
நோயைக் காட்டிலும் வைத்தியருக்கு அஞ்ச வேண்டும்.  -( , , )  
ஒவ்வொரு வைத்தியரும் தம் மாத்திரைகளே உயர்ந்தவை என்று எண்ணுகிறார்.  -ஜெர்மனி  
புது வைத்தியர் புதிதாகச் சவக்குழி தோண்டுபவர்.  -( , , )  
நல்ல வைத்தியர் எவரும் தாம் மருந்து உண்பதில்லை.

 -இதாலி  
வைத்தியர் மனத்திற்கு ஆறுதலளிப்பவரைத் தவிர வேறில்லை.  -லத்தீன்  
நோய்களுக்கு அஞ்சி ஓடும் பொழுது, நீங்கள் வைத்தியர் கைகளில் சிக்குகிறீர்கள்.  -( , , )  
சூரியன் ஒரு போதும் வராத இடத்திற்கு வைத்தியர் அடிக்கடி வருவார்.  - ஸெக்   

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel