ஒரு பெண் கடந்தாண்டு பொங்கல் விடுமுறையில் என்னிடம் திருமண தாமத பிரச்சினைகளுக்காக ஜாதகம் பார்த்தார். நான் அப்போது அவர்களுக்கு கூறிய பதில் இன்னும் ஓர் ஆண்டுகளுக்கு வாய்ப்புகள் இல்லை. நீங்கள் இருக்கும் வேலையில் கவனம் செலுத்தி அடுத்த நிலைக்கு வருவதற்கான முயற்சிகளை செய்யுங்கள். இந்த ஆண்டு இறுதியில் உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு முன்னாள் அல்லது பொங்கலுக்கு பின் நிச்சயமாக திருமணம் தானாகவே நடைபெறும் என்றேன். இதற்காக கோயிலுக்கு பரிகாரங்களோ எதையும் செய்ய வேண்டாம். ஒரு தொழிலில் கவனம் செலுத்துங்கள் என்றேன். அவர் ஏற்கனவே அவருடைய நண்பர் திருமணம் பற்றிய விஷயங்களில் சொன்னது போல் நடந்ததற்காக அவர்கள் பரிந்துரையின்பேரில் வந்ததால் என் மீது வைத்த நம்பிக்கையால் அவர் எந்த கோயிலுக்கோ அல்லது மறுபடியும் வேறு எங்கும் ஜோதிடம் பார்க்காமல் வேலையில் கவனம் செலுத்தினார். இன்று திருமணம் நிச்சயக்கப்பட்ட தகவலை கூறி இருக்கிறார் திருமண தேதியும் சொல்லி இருக்கிறார். எந்த ஒரு விஷயம் நடக்கும் காலத்தை வெளிப்படையாக முன் கூட்டியே சொல்லிவிட்டால் அது அந்த காலம் வரை அந்த ஜாதகர் ஏற்றுக் கொள்ள தயார் ஆகிவிடுவார். அதே சிந்தனையில் இல்லாமல் மாற்று சிந்தனையில் முன்னேறுவார்கள். நாம் ஆறு மாதம் மூன்று மாதம் என்று தற்காலிகமாக அவர்களை திருப்தி படுத்தினால் அவர்கள் அந்த நம்பிக்கையில் அதே விஷயததில் காலத்தையும் நேரத்தையும் செலவு செய்துவிடுவார்கள். பிறகு, அந்த குறிப்பிட்ட காலத்தில் நடக்கவில்லை என்றால் நம்மையும் நம்பமாட்டார்கள். மீண்டும் மீண்டும் வேறு ஒருவரிடம் ஜோதிடம் பார்த்து கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு மன உளைச்சலை அதிகமாகும். எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை அதை வெளிப்படையாக இரண்டு வருடம் அல்லது ஒரு வருடம் என்று வெளிப்படையாக கூறி விட்டால் அவர்கள் அந்த காலத்தில் வேறு ஒரு சிந்தனையில் முன்னேறுவார்கள். நாம் குறித்த காலத்தில் விஷயம் நடக்கும் பொழுது அவர்கள் உண்மையில் மன நிம்மதி அடைவார்கள். இதுவே " காலத்தை சேமிக்கும் முறை "  திருமணம் செய்யக் கூடிய காலத்தை துல்லியமாகக் கண்டறிவது என்பது கேபி முறையில் மிக நுட்பமாக கண்டறியலாம் அதாவது ஏழாம் அதிபதி நின்ற நட்சத்திர நாதன் அந்த நட்சத்திர நாதன் நின்ற வீட்டின் அதிபதி அந்த வீட்டின் அதிபதி நின்ற இவர்களை அந்த லக்னத்திற்கு சுபர் அல்லது லக்ன ஏழாம் அதிபதி என்னுடைய சாரம் பெற்ற கிரகங்கள் கோச்சாரத்தில் அல்லது புத்தியை, அந்தரத்தை நடத்தக் கூடிய கோள்களில் திக் பலம் பெற்று சுபர் பார்வை பெறும் பொழுது பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் நடைபெறும் இதை (western astrology) மேற்கத்திய ஜோதிட முறையிலும் மிக நுட்பமாக எடுக்கலாம்.

Please join our telegram group for more such stories and updates.telegram channel