ஒரு சிலர் அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தில், சில பெண்களும் ஆண்களும் பெயரை வைத்துக் கொள்கின்றனர்.
    
உதாரண பெண்களின் நட்சத்திர பெயர்:

•    அஸ்வினி
•    கிருத்திகா
•    ரோகிணி
•    சித்திரா 
•    உத்திரா 
•    அனுஷா 
•    மகா
•    சுவாதி
•    ரேவதி

உதாரண ஆண்களின் நட்சத்திர பெயர்:

•    அஸ்வின்
•    கார்த்திக்
•    பரணி
•    உத்திரன் 
•    சித்திரைச் செல்வன்
•    ஆதி ( மூலம் ) 
•    சதா ( சதயம் ) 

இப்படி ஒரு சிலர் அவர்கள் பிறந்த நட்சத்திரம் அதையே ஒரு சிலர் பெயராக வைக்கிறார்கள். ஆனால் இது சரியான முறை அல்ல. எப்போதெல்லாம் இயற்கை அசுபர் அதாவது ராகு - கேது, சனி, செவ்வாய், சூரியன், தேய்பிறை சந்திரன். மேலும் உங்கள் ஜாதக லக்ன அசுபர் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தின் மீது செல்லும் போதும், சப்தமமாக பார்க்கும் போதும் அதிக தீமையை செய்யும் மனதளவில் பலம் குறையும். மேற்சொன்ன பெயரில் உதாரணம் திரு நடிகை ரோகினி அவர்கள் எடுத்துக் கொள்வோம். திரைக்கு வந்து சில காலங்களிலேயே உச்சத்துக்கு சென்றார். பிறகு சிறிது காலம் அமைதியாக இருந்தார். பிறகு சில காலம் கழித்து மகளிர் மட்டும் கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் புகழ் பெற்றார். பிறகு சிறிது காலம் அமைதியாக இருந்தார். மீண்டும் சினிமாவில் வில்லன் நடிகர் திரு ரகுவரனை மணந்தார். எட்டு ஆண்டு மண வாழ்க்கையில் பிரச்சனை சந்தித்தவர் விவாகரத்து பெற்றார். பிறகு மீண்டும் சினிமாவில் விருமாண்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் திரைக்கு வந்தார். மீண்டும் சில காலம் அமைதியாக இருந்தார். பிறகு தன்னுடைய கணவனான ரகுவரன் இறந்தார். சில காலம் கழித்து பாகுபலி படத்தில் மீண்டும் முக்கிய கதாபாத்திரம் நடித்தார் சங்கா பாகுபலியின் வளர்ப்புத்தாய். ஒரு சுபகிரகம் அந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் போதெல்லாம் வளர்ச்சி அடைந்து. அசுப கிரகம் செல்லும்போதெல்லாம் வாழ்க்கையில் தாழ்ச்சியடைந்து, ஒரு சீரான முன்னேற்ற வாழ்க்கை இல்லாமல் சரியான மணவாழ்க்கை கொடுக்காமல் வாழ்க்கையும் சினிமாவும் அவருக்கு பெரிய அளவுத் நிம்மதி தரவில்லை. அதே போல நடிகை ரேவதி அவர்களும் 1986 திருமணம் செய்து 2013 - இல் விவாகரத்து பெற்றார். நடிகை சதா அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை தெரிந்தவர்களுக்கு தெரியும். அவருடைய வாழ்க்கையை சிறப்பாக இல்லை என்பது. அதே போல என்னுடன் படித்த நண்பர் பரணி என்று ஒருவர் கடந்த மாதம் ஜாதகம் பார்க்க வீட்டுக்கு வந்தார். அவர் ஜாதகத்தில் அவருடைய நட்சத்திரம் பரணின் மீது சுபகிரகம் போகும்போதெல்லாம் வளர்ச்சி அடைந்து இருக்கிறார். அசுப கிரகம் செல்லும்போதெல்லாம் தாழ்வு அடைந்திருக்கிறார். நடைபெற்ற காதல் திருமணம் ஓராண்டில் முடிந்தது. இப்போது மறு வரன் தேடிக் கொண்டிருக்கிறார். இதுபோல பல உதாரணம் என்னால் காட்ட முடியும். ஆனால், அது தனி வாழ்க்கையை பிரதிபலிப்பது போன்று ஆகிவிடும். பரணி இடம் அனுமதி பெற்று இந்த பதிவை எழுதுகிறேன். எனவே, உங்களுக்கு தெரிந்தவர்கள் எதிர்காலத்தில் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த காரணத்தை கொண்டும் நட்சத்திர பெயர் வைக்க வேண்டாம். பெயரியல் என்பது ஒரு தனி கலை ஜோதிடத்தில். எனவே உங்கள் வீட்டு அருகில் இருக்கக் கூடிய தொழில்முறை ஜோதிடரை சென்று அணுகி நல்ல பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். 

Please join our telegram group for more such stories and updates.telegram channel