விருட்ஷ சாஸ்திரத்தில் கூறிய படி உங்கள் நட்சத்திரம் பாதம் அறிந்து மரங்களை நடுங்கள். குறைந்த பட்சம் இரண்டு கன்றுகளாக நடுங்கள். தவறாமல் பேணி பாதுகாத்து வாருங்கள். உங்களின் வாழ்க்கை கண்டிப்பாக வளமை அடையும். நாடும் நலம் பெரும்.

அஸ்வினி:

•    1 ஆம் பாதம் – காஞ்சிதை (எட்டி)
•    2 ஆம் பாதம் – மகிழம்
•    3 ஆம் பாதம் – பாதாம்
•    4 ஆம் பாதம் – நண்டாஞ்சு

பரணி:

•    1 ஆம் பாதம் – அத்தி
•    2 ஆம் பாதம் – மஞ்சக்கடம்பு
•    3 ஆம் பாதம் – விளா
•    4 ஆம் பாதம் – நந்தியாவட்டை

கார்த்திகை:

•    1 ஆம் பாதம் – நெல்லி
•    2 ஆம் பாதம் – மணிபுங்கம்
•    3 ஆம் பாதம் – வெண் தேக்கு 
•    4 ஆம் பாதம் – நிரிவேங்கை

ரோஹிணி:

•    1 ஆம் பாதம் – நாவல்
•    2 ஆம் பாதம் – சிவப்பு மந்தாரை
•    3 ஆம் பாதம் – மந்தாரை
•    4 ஆம் பாதம் – நாகலிங்கம்

மிருகஷீரிஷம்:

•    1 ஆம் பாதம் – கருங்காலி
•    2 ஆம் பாதம் – ஆச்சா
•    3 ஆம் பாதம் – வேம்பு
•    4 ஆம் பாதம் – நீர்க்கடம்பு

திருவாதிரை:

•    1 ஆம் பாதம் – செங்கருங்காலி
•    2 ஆம் பாதம் – வெள்ளை
•    3 ஆம் பாதம் – வெள்ளெருக்கு
•    4 ஆம் பாதம் – வெள்ளெருக்கு

புனர்பூசம்:

•    1 ஆம் பாதம் – மூங்கில்
•    2 ஆம் பாதம் – மலைவேம்பு
•    3 ஆம் பாதம் – அடப்பமரம்
•    4 ஆம் பாதம் – நெல்லி

பூசம்:

•    1 ஆம் பாதம் – அரசு
•    2 ஆம் பாதம் – ஆச்சா
•    3 ஆம் பாதம் – இருள்
•    4 ஆம் பாதம் – நொச்சி

ஆயில்யம்:

•    1 ஆம் பாதம் – புன்னை
•    2 ஆம் பாதம் – முசுக்கட்டை
•    3 ஆம் பாதம் – இலந்தை
•    4 ஆம் பாதம் – பலா

மகம்:

•    1 ஆம் பாதம் – ஆலமரம்
•    2 ஆம் பாதம் – முத்திலா மரம்
•    3 ஆம் பாதம் – இலுப்பை
•    4 ஆம் பாதம் – பவளமல்லி

பூரம்:

•    1 ஆம் பாதம் – பலா
•    2 ஆம் பாதம் – வாகை
•    3 ஆம் பாதம் – ருத்திராட்சம்
•    4 ஆம் பாதம் – பலா

உத்திரம்:

•    1 ஆம் பாதம் – ஆலசி
•    2 ஆம் பாதம் – வாதநாராயணன்
•    3 ஆம் பாதம் – எட்டி
•    4 ஆம் பாதம் – புங்கமரம்

ஹஸ்தம்:

•    1 ஆம் பாதம் – ஆத்தி
•    2 ஆம் பாதம் – தென்னை
•    3 ஆம் பாதம் – ஓதியன்
•    4 ஆம் பாதம் – புத்திரசீவி

சித்திரை:

•    1 ஆம் பாதம் – வில்வம்
•    2 ஆம் பாதம் – புரசு
•    3 ஆம் பாதம் – கொடுக்காபுளி
•    4 ஆம் பாதம் – தங்க அரளி

சுவாதி:

•    1 ஆம் பாதம் – மருது
•    2 ஆம் பாதம் – புளி
•    3 ஆம் பாதம் – மஞ்சள் கொன்றை
•    4 ஆம் பாதம் – கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்:

•    1 ஆம் பாதம் – விளா
•    2 ஆம் பாதம் – சிம்சுபா
•    3 ஆம் பாதம் – பூவன்
•    4 ஆம் பாதம் – தூங்குமூஞ்சி

அனுஷம்:

•    1 ஆம் பாதம் – மகிழம்
•    2 ஆம் பாதம் – பூமருது
•    3 ஆம் பாதம் – கொங்கு
•    4 ஆம் பாதம் – தேக்கு

கேட்டை:

•    1 ஆம் பாதம் – பலா
•    2 ஆம் பாதம் – பூவரசு
•    3 ஆம் பாதம் – அரசு
•    4 ஆம் பாதம் – வேம்பு

மூலம்:

•    1 ஆம் பாதம் – மராமரம்
•    2 ஆம் பாதம் – பெரு
•    3 ஆம் பாதம் – செண்பக மரம்
•    4 ஆம் பாதம் – ஆச்சா

பூராடம்:

•    1 ஆம் பாதம் – வஞ்சி
•    2 ஆம் பாதம் – கடற்கொஞ்சி
•    3 ஆம் பாதம் – சந்தானம்
•    4 ஆம் பாதம் – எலுமிச்சை
உத்திராடம்:

•    1 ஆம் பாதம் – பலா
•    2 ஆம் பாதம் – கடுக்காய்
•    3 ஆம் பாதம் – சாரப்பருப்பு
•    4 ஆம் பாதம் – தாளை

திருவோணம்:

•    1 ஆம் பாதம் – வெள்ளெருக்கு
•    2 ஆம் பாதம் – கருங்காலி
•    3 ஆம் பாதம் – சிறுநாகப்பூ
•    4 ஆம் பாதம் – பாக்கு

அவிட்டம்:

•    1 ஆம் பாதம் – வன்னி
•    2 ஆம் பாதம் – கருவேல்
•    3 ஆம் பாதம் – சீத்தா
•    4 ஆம் பாதம் – ஜாதிக்காய்

சதயம்:

•    1 ஆம் பாதம் – கடம்பு
•    2 ஆம் பாதம் – பரம்பை
•    3 ஆம் பாதம் – ராம்சீதா 
•    4 ஆம் பாதம் – திலகமரம்

பூரட்டாதி:
•    1 ஆம் பாதம் – தேமா
•    2 ஆம் பாதம் – குங்கிலியம் 
•    3 ஆம் பாதம் – சுந்தரவேம்பு
•    4 ஆம் பாதம் – கன்னிமந்தாரை

உத்திரட்டாதி:

•    1 ஆம் பாதம் – வேம்பு
•    2 ஆம் பாதம் – குல்மோகர்
•    3 ஆம் பாதம் – சேராங்கொட்டை
•    4 ஆம் பாதம் – செம்மரம்

ரேவதி:

•    1 ஆம் பாதம் – பனை
•    2 ஆம் பாதம் – தங்க அரளி
•    3 ஆம் பாதம் – செஞ்சந்தனம்
•    4 ஆம் பாதம் – மஞ்ச பலா

இது பொதுவானது. மேலும் திசை / புத்தி களுக்கு பஞ்சபூத அடிப்படையில் ராசிகளுக்கு நமக்கு எந்த காரியம் வேண்டுமோ அதற்கு உண்டான என்று தனித்தனியாக மரங்கள் உள்ளன. அதைப் பற்றிய ஆய்வுகளை ( மூல நூல்களை படித்து ) வருகிறேன், மேற்கொண்டு வருகிறேன். இது பொதுவான மரம். உங்கள் நட்சத்திரத்திற்குரியது. 
இதை பயன்படுத்த வெற்றி கிடைக்கும். 

1. மரம் வீட்டில் வளர்க்கலாமா? 
தாராளமாக வீட்டில் வளர்க்கலாம் .
2. எந்த திசையில் வைக்க வேண்டும்? உங்களுக்கு எந்த திசையில் சௌகரியம் இருக்கிறதோ அந்த திசையில் வளர்க்க வேண்டும். 
3. எட்டி மரம் எருக்க மரம் வளர்க்கக் கூடாது என்று சொல்கிறார்களே வளர்கலாமா?
உங்கள் நட்சத்திர விருட்சமாக இருந்தால் தாராளமாக வளர்க்கலாம்.
4. எனக்கு ராசி மட்டும் தான் தெரியும் நட்சத்திரம் மட்டும் தான் தெரியும் தெரியாது என்ன செய்யலாம்? 
உங்கள் வீட்டில் உள்ள அருகில் உள்ள ஜோதிடரை அணுகி அவரிடம் தெரிந்து கொள்ளுங்கள் பாதத்தை பற்றிய அதற்குப் பிறகு மரத்தை வளருங்கள். 
5. இந்த மரம் எப்படி இருக்கும் எங்கு கிடைக்கும்?
விருட்ச சாஸ்திரம் அதே போல நட்சத்திர கோவை என்னும் புத்தகத்தில் கருப்பு வெள்ளை படமாக இருக்கும் தஞ்சை சரஸ்வதி மகாலில் கிடைக்கும் அங்கு சென்று பாருங்கள். 
6. மரம் எங்கு கிடைக்கும்?
எனக்கு தெரியாது. நீங்கள் தான் தேடி கண்டுபிடிக்க வேண்டும் 
7. மரத்திற்கு ஏதேனும் பாதிப்பு வந்தால் நமக்கு பாதிப்பு வருமா?
நிச்சயமாக 100 % வராது.
8. மரத்திற்கு நாமே தண்ணீர் ஊற்ற வேண்டுமா?
நட்சத்திர மரத்தை நட்சத்திரகாரர் அதாவது ஜாதகர் நட்டு வைத்தால் போதும் சூழ்நிலை இருந்தால் அவரே தண்ணீர் ஊற்றலாம் இல்லை என்றால் அவர்களுடைய பெற்றோர்கள் அவருடைய மனைவிமார்கள் குழந்தைகள் தண்ணீர் ஊற்றலாம். 

Please join our telegram group for more such stories and updates.telegram channel